கோவையில் மோடி
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (மார்ச் 18) தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட சாலை அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
அதிமுக – பாமக கூட்டணி?
அதிமுக பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
சத்யபிரத சாகு ஆலோசனை!
மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
கரும்பு விவசாயி சின்னம் – அவசர வழக்கு!
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டிக்கெட் விற்பனை!
சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் சென்னை – பெங்களூரு முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்!
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 5வது நாளாக விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.75 க்கும், டீசல் ரூபாய் 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெப்பம் அதிகரிக்கும்!
தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பதினெட்டாவது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல்! வெல்லட்டும் மக்களாட்சி! வீழட்டும் அதிகாரக் குவிப்பு!