மோடி விஷத்தை கக்குகிறார்… தென்னிந்திய கட்சிகளை பற்றி பேசியதற்கு சித்தராமையா பதிலடி!

Published On:

| By Kavi

தென்னிந்தியாவில் வசிக்கும் உத்தரப் பிரதேசம் மக்களைப் பற்றி இந்தியா கூட்டணி கட்சியினர் தவறாக பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசிய அவர், “இளவரசரின் (ராகுல் காந்தி) இந்த கேம் மிகவும் ஆபத்தானது. இந்தியா கூட்டணி இங்கு உங்களிடம் வந்து வாக்கு சேகரிக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் வந்து பணியாற்றும்  உபி மக்களை பற்றி இந்தியா கூட்டணி கட்சிகள் தவறாக பேசுகின்றன. உத்தரப் பிரதேச மக்களை அவமானப்படுத்துகிறார்கள்.

இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை தவறாக பேசுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆகியவை உத்தர பிரதேச மக்களுக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன.

இப்படி உங்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யும் இந்தியா கூட்டணியை மன்னித்து வாக்களிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

Modi speech in Uttar Pradesh

வலுவான அரசை தேர்ந்தெடுங்கள் என்று தெரிவித்த அவர், “இந்தியாவின் பலத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு அரசாங்கத்தை நடத்தக்கூடிய தலைவரை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு தான் இந்த தேர்தல்” என்று மோடி பேசிக் கொண்டிருக்கும்போதே ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் எழுந்தன.

இதைக் கேட்ட பிரதமர் மோடி, “உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறுவதை நீங்கள் கடினமாக்கி உள்ளீர்கள் என்பதை உங்கள் உற்சாகம் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு இந்தியா கூட்டணியின் தென்னிந்திய தலைவர்களில் ஒருவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்னிந்திய மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டதால் நன்றி கெட்டு பிரதமர் மோடி பேசுகிறார். தற்போது தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து தென்னிந்திய மற்றும் வட இந்தியர்களை பிரிக்க முயற்சிக்கிறார்.

இந்தியா கூட்டணி யார் மீதும் பாகுபாடு காட்டியதில்லை. ஆனால் மோடி போன்றவர்கள் விஷத்தை கக்குகிறார்கள்.

ஒவ்வொரு மாநில மக்களுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” என்ற பதிலடி கொடுத்துள்ளார்.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Paris Olympics 2024: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு – யார் யாருக்கு இடம்?

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி அறிவிப்பு!

மழையால் ரத்தான SRH vs GT ஆட்டம், சிக்கலில் CSK, RCB!

சைந்தவியின் உருக்கமான பதிவு : டேக் செய்து ட்வீட் போட்ட ஜி.வி.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share