டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை இன்று (பிப்ரவரி 28) ராஜினாமா செய்துள்ளனர்.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் டெல்லி அமைச்சரவையில் நிதி, கல்வி, உள்ளிட்ட முக்கியம் வாய்ந்த துறைகளை நிர்வகித்து வந்தார்.
உள்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் கைது செய்தது. இவர் கடந்த 9 மாதங்களாக சிறையில் உள்ளார்.
இந்தநிலையில், மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகிய இருவரும் தங்களது ராஜினாமா மனுக்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பினர். அவர்களது மனுக்களை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
மணிஷ் சிசோடியாவின் இலாகாக்கள் டெல்லி கேபினட் அமைச்சர்கள் கைலாஷ் கெஹ்லோட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
மணிஷ் சிசோடியா வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!