கிச்சன் கீர்த்தனா : மாவடு
‘மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்’ என்பார்கள். அதிலும் மாவடு, மேலும் சில கவளைங்களை ஊட்டும். காயும் சரி, அதன் நீரும் சரி மணமும் சுவையும் அபாரமானது. பலர் மாவடு செய்வது கடினம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் ஊறுகாய் வகையில் மாவடு போடுவதுதான் வெகு சுலபம். அதற்கான ரெசிப்பிதான் இதோ…
என்ன தேவை?
மாவடு – ஒரு கிலோ
கல் உப்பு – 100 கிராம்
மிளகாய்ப்பொடி – 50 கிராம்
கடுகுப்பொடி – 25 கிராம்
மஞ்சள்பொடி – 25 கிராம்
விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மாவடுவை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதில் உப்பு, மிளகாய்ப்பொடி, கடுகுப்பொடி, மஞ்சள்பொடி ஆகியன போட்டு நன்றாகக் கலக்கவும். அதன் மேல் 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு குலுக்கி வைக்கவும். வெயிலில் வைக்க வேண்டாம். நிழலான பகுதியில் வைத்தாலே போதும். சில நாள்களில் மாவடு நன்கு நீர்விட்டு ஊறி சுவையாகத் தயாராகிவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
WPL 2024: முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய RCB அணி!
மோடியின் வடக்கு வாதம்: அப்டேட் குமாரு