கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (மே 10) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன. பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகள் சார்பிலும் தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கர்நாடகாவில் 5.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
224 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று காலை ஷிக்கார்பூர் பகுதியில் வாக்களிப்பதற்கு முன்பாக ஸ்ரீ ஹுச்சார்யா சாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
செல்வம்
உக்கிரமாகி வரும் உக்ரைன் – ரஷ்யா போர்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ப்ளஸ் 2 துணைத்தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!