6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விறுவிறுப்பாகும் தேர்தல் களம்!

public

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட வாக்குப்பதிவு பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 59 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 10,17,82,472 வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். மொத்தம் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு பணிகளுக்காக மொத்தம் 1,13,167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தந்த மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹோடா காலையில் தனது குடும்பத்துடன் வந்து ரோஹ்தாக்கில் வாக்களித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலையில் வாக்களித்தனர். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

டெல்லி அவுரங்கசிப் லேன் பகுதியில் உள்ள என்.பி உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் ராகுல் காந்தி வாக்களித்தார். ஹரியானா மாநிலம் குருகிராமில் பைன்கிரிஸ்ட் பள்ளி வாக்குச்சாவடியில் விராட் கோலி தனது சகோதரருடன் வந்து வாக்களித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா திக்‌ஷித், ஹரியானா முதல்வர் மனோகர் லால், போபால் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாகூர், பாஜக வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காலையில் வாக்களித்தனர்.

டெல்லியில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடி வெறுப்பை பயன்படுத்துகிறார். காங்கிரஸ் அன்பை பயன்படுத்தியுள்ளது. அன்புதான் வெற்றிபெறும் என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

12 மணி வரையில் 25.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநில வாரியாக, பிகாரில் 20.70 விழுக்காடு, ஹரியானாவில் 23.25 விழுக்காடு, மத்தியப் பிரதேசத்தில் 28.12 விழுக்காடு, உத்தரப் பிரதேசத்தில் 21.75 விழுக்காடு, மேற்கு வங்கத்தில் 28.08 விழுக்காடு, ஜார்கண்டில் 31.27 விழுக்காடு, டெல்லியில் 19.51 விழுக்காடு ஆகிய விகிதங்களில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

.

.

**

மேலும் படிக்க

**

.

[ டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/11/55)

.

[தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!](https://minnambalam.com/k/2019/05/12/9)

.

[அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்](https://minnambalam.com/k/2019/05/12/21)

.

[பெரம்பலூர்: வழக்கறிஞர் அருளின் கம்ப்யூட்டரைக் கைப்பற்ற காவல்துறை முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/12/16)

.

[டைம் இதழ் அட்டைப்படம்: பாஜக கண்டனம்](https://minnambalam.com/k/2019/05/12/18)

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *