ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்கும்!

ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்கும்!

தனியார் பள்ளிகள் நாளை( ஜூலை 19 ) இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

அரசின் உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை!
|

அரசின் உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை!

தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறையை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவிலும் எதிர்ப்பு… எங்கு செல்கிறார் கோத்தபய ராஜபக்‌சே?

மாலத்தீவிலும் எதிர்ப்பு… எங்கு செல்கிறார் கோத்தபய ராஜபக்‌சே?

இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மிகப்பெரும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு: நித்தி

திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு: நித்தி

பாலியல் வழக்கு, கொள்ளை, சிறுமிகள் கடத்தல் என நித்தியானந்தா மீது பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளது

கிச்சன் கீர்த்தனா: கார பின் வீல்ஸ்!

கிச்சன் கீர்த்தனா: கார பின் வீல்ஸ்!

பள்ளியை விட்டு வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள் மட்டுமல்லர்; வேலையில் இருந்து களைப்பாக மாலையில் வீடு திரும்பும் பெரியவர்களும் சாப்பிட ஏதாவது இருக்குமா என்று கேட்பார்கள்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை: ஒரு வாரம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும்!

சதுரகிரியில் ஆடி அமாவாசை: ஒரு வாரம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும்!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒரு வாரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை….

கிச்சன் கீர்த்தனா: ரவை ஃப்ரைடு பிஸ்கட்!

கிச்சன் கீர்த்தனா: ரவை ஃப்ரைடு பிஸ்கட்!

தேங்காய்க்குப் பதில் கொப்பரைத் தேங்காயும் பயன்படுத்தலாம். ரவையை வறுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

நாளை (ஜூலை 10) பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி பக்ரீத் திருநாளை…

மேகவெடிப்பு – அமர்நாத் யாத்திரையில் பயங்கரம்: பக்தர்களின் நிலை?

மேகவெடிப்பு – அமர்நாத் யாத்திரையில் பயங்கரம்: பக்தர்களின் நிலை?

அமர்நாத் குகை அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். பனி, தீவிரவாத அச்சுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல், தமிழகம் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்….

வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 210 பணியின் தன்மை: ஜூனியர் கோர்ட் அசிஸ்டன்ட் ஊதியம்: ரூ.35,400/- கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்று கணினியில் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-30 கடைசி தேதி: 10/7/2022 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம். ஆல் தி…

�துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த ரிங்கு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!

கடந்த 2008ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் …

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சுக்கா!

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சுக்கா!

பெயரைச் சொல்லும்போதே நாவில் எச்சில் ஊரும் சைடிஷ் சுக்கா. அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த மட்டன் சுக்காவைப் போல், சைவ பிரியர்களை அசத்த இந்த காலிஃப்ளவர் சுக்கா பெஸ்ட் சாய்ஸ். அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள உதவும். அனைவருக்கும் ஏற்றதாக அமையும். **என்ன தேவை?** காலிஃப்ளவர் – ஒன்று பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கிய தக்காளி – இரண்டு கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –…

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு நாடு முழுவதும் தடை!

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு நாடு முழுவதும் தடை!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் உரிய பலன்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டாலும் அது ஒரு சில மாதங்களுக்கு மேல் நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இத்தகைய தடையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக்…

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

மெரிக்காவில் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங் நிறுவனத்தில் கெவின் போர்டு என்னும் ஊழியர் சமையற்காரராக 27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகள் செரீனா இந்த விஷயத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த 27 வருடங்களாகத் தன்னையும், தனது மூத்த சகோதரியையும் கஷ்டமில்லாமல் வளர்த்து வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ‘கோ-பண்ட்-மீ’ எனப்படும் அமெரிக்காவின்…

பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் காலத்து பழைய கட்டடம் இடிப்பு!

பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் காலத்து பழைய கட்டடம் இடிப்பு!

பிஹார் மாநிலத்தில் பழைய புகழ்பெற்ற ஆங்கிலேயர் காலத்து கட்டடம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்தக் கட்டடம் ஆஸ்கர் விருது பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில் சில காட்சிகளில் இடம்பெற்ற கட்டடமாகும். இந்தக் கட்டடம் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பிரிட்டிஷ் கால கட்டடம், பாட்னா மாவட்ட கலெக்டர் அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. பிஹார் அரசின் மறு சீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பிரிட்டிஷ் கால கட்டடம் இடிக்கப்பட்டது. இந்த பாட்னா கலெக்டர் அலுவலக…

வேலைவாய்ப்பு : ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு : ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணி!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: 1 பணியின் தன்மை : Hospital Quality Manager ஊதியம்: ரூ.60,000/- கல்வித் தகுதி: எம்பிபிஎஸ்/ பல் மருத்துவம்/ ஆயுஷ்/ பாராமெடிக்கல் பட்டம் கடைசித் தேதி: 04-07-2022 மேலும் விவரங்களுக்கு [இந்த](https://madurai.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். **ஆல் தி பெஸ்ட்**

இரு நாடுகளை உறுப்பினர்களாக இணைக்க நேட்டோ ஆலோசனை

இரு நாடுகளை உறுப்பினர்களாக இணைக்க நேட்டோ ஆலோசனை

ஸ்வீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளையும் நேட்டோ அமைப்பில் உறுப்பினர் நாடுகளாக இணைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஆரம்பித்த நேட்டோ உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்ததால் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இந்நிலையில் அந்த போர் 120 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாடு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நேட்டோவில் அமைப்பில் இணைய விண்ணப்பம்…

இரண்டு வருடங்கள் கழித்து  அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இரண்டு வருடங்கள் கழித்து அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரொனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாததால் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமர்நாத் யாத்திரைக்கு தேவையான ஏற்பாடு நடவடிக்கைகளை காஷ்மீர் அரசு துரிதமாக செய்து முடித்தது. இந்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 1500க்கும் மேற்பட்ட கூடாரங்கள்…

மறைமுக ஏலம்: பருத்தி விவசாயிகள் சாலை மறியல்!

மறைமுக ஏலம்: பருத்தி விவசாயிகள் சாலை மறியல்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்து வருகிறது. இங்கு நடந்த பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக கேட்கப்பட்டதாகக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது நாளை (ஜூலை 1) மீண்டும்…

சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு: விவசாயிகள் அவதி!

சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு: விவசாயிகள் அவதி!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்குட்பட்ட அகனி, ராமாபுரம், வள்ளுவக்குடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, நிம்மேலி, புங்கனூர், கருகுடி, கொண்டல், கஞ்சிகுடி, அகர எலத்தூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சீர்காழி பகுதியில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குறுவை பயிர்களுக்குத் தண்ணீர்…

களைகட்டும் கருவாடு வியாபாரம்!

களைகட்டும் கருவாடு வியாபாரம்!

மீன்களை விட கருவாட்டுக்கு எப்போதும் கிராக்கி இருப்பதுடன் நல்ல விலை கிடைக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கருவாடு வியாபாரத் தொழில் களைகட்டி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. அதுபோல் தொண்டி முதல் ராமேஸ்வரம், சாயல்குடி, நரிப்பையூர் வரையிலும் ஏராளமான மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியிலிருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் பிடித்து…

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், பொய்யாமணி ஊராட்சி பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவந்த மணிகண்டன் என்பவர் தன் பிறந்தநாளை பள்ளியின் ஒரு வகுப்பறையில்…

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

இந்திய அஞ்சல் துறை வங்கியின் (India Post Payments Bank) சேவையைப் பயன்படுத்தி, ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வசதியைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் எனப் பல தரப்பினரும் மாதம்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கு அடையாளமாக ஒவ்வோர்…

கிச்சன் கீர்த்தனா: கேரட் குடமிளகாய் வதக்கல்

கிச்சன் கீர்த்தனா: கேரட் குடமிளகாய் வதக்கல்

தொட்டுக்கொள்ள பலவகை சைடிஷ் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட தோதான ஒரு சைடிஷ் செய்வது சற்று சிரமம்தான். அந்த வகையில் இந்த கேரட் குடமிளகாய் வதக்கல், எல்லா உணவுக்கும் ஏற்றதாகவும் ஆரோக்கியமானதாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் அமையும். **என்ன தேவை?** கேரட் – ஒன்று குடமிளகாய் – ஒன்று மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் கடுகு – கால்…

கர்நாடகக் காவல் நிலையத்தில் எலிகளைச் சமாளிக்க பூனைகள் வளர்ப்பு!

கர்நாடகக் காவல் நிலையத்தில் எலிகளைச் சமாளிக்க பூனைகள் வளர்ப்பு!

கர்நாடகத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகள் வளர்க்க அந்த காவல் நிலைய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். வீடுகளில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்தால் பூனைகள் வளர்க்கப்படுவது வழக்கம். அதேபோன்று தற்போது கர்நாடகத்தில் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரி பிதனூர் காவல் நிலையத்தில் எலிகளின் தொல்லை அதிகமானதால் அங்குள்ள அதிகாரிகள் பூனைகளை வளர்க்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே ஒரு காவல் நிலையத்தில் பூனையை வளர்ப்பது இதுவே முதன்முறையாகும். அந்தக் காவல் நிலையத்தில் எலி தொல்லையால் பல…

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

நேபாள நாட்டின் காத்மாண்டுவில் பானிபூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் பிரபலமான தின்பண்டம் பானிபூரி. இது பூரியில் சுவை நீரை ஊற்றி, மொறுமொறுப்பான சுவையிலான மசாலாவுடன் உருளைக்கிழங்கை கலந்து புளி, மிளகாய்ப்பொடி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பரிமாறப்படும் பிரபலமான உணவு வகை. இந்த நிலையில் நேபாள நாட்டின் காத்மாண்டுவில் காலரா நோய் பரவி வருவதால் பானிபூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் தற்போது காலரா நோய் பரவல்…

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களுடன் தகவல் பரவியது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற பல கிராமங்கள் உள்ளன. இங்கு நேற்று (ஜூன் 28) காலை ஹெலிகாப்டர் வானில் பறப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கேட்டதாகவும் பிறகு திடீரென பெரிய சத்தம் கேட்டு நின்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்….