மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

டைம் இதழ் அட்டைப்படம்: பாஜக கண்டனம்!

டைம் இதழ் அட்டைப்படம்: பாஜக கண்டனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டைம் இதழ் அதன் அட்டைப்படத்தில் மோடியின் படத்தைப் போட்டு அத்துடன் ‘பிரித்தாளும் தலைவர்’ என்று எழுதியிருந்தது. மேலும், மோடி குறித்துக் கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தலின் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே இன்னும் மீதமிருக்கும் நேரத்தில் மோடி குறித்து இத்தகைய விமர்சனங்களை டைம் இதழ் முன்வைத்துள்ளது.

மோடி குறித்த கட்டுரையை ஆதிஷ் தசீர் எழுதியிருந்தார். அதில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பிரிவினைகளுக்கு உள்ளாகியுள்ளது” என்று அவர் சாடியுள்ளார். இக்கட்டுரையில், கும்பல் படுகொலைகள், உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்ட விவகாரம் முதல் போபால் மக்களவைத் தொகுதியில் சாத்வி பிரக்யா சிங் தாகூரை வேட்பாளராக நிறுத்த பாஜக எடுத்துள்ள முடிவு வரை பல விவகாரங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.

மோடியை மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளும் பலவீனமான கட்சிகளாக இருப்பதாக இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரம்பரை அரசியல் கொள்கையைத் தவிர, நாட்டுக்கு வழங்குவதற்கு காங்கிரஸிடம் வேறு எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் டைம் இதழின் அட்டைப்படத்தில் மோடியின் படம் வந்துள்ளது 2015ஆம் ஆண்டு மே மாதம் மோடியின் நேர்க்காணல் அட்டைப்படத்துடன் டைம் இதழில் வெளியாகியது.

2015ஆம் ஆண்டு மே மாதம் டைம் இதழில் மோடியின் அட்டைப்படம் வெளியானபோது பிரதமர் மோடி ஓராண்டு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்திருந்தார். இந்த நிலையில், டைம் இதழின் கட்டுரைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளரான சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “டைம் இதழில் கட்டுரை எழுதியவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.

கட்டுரையை எழுதிய ஆதிஷ் தசீர் இங்கிலாந்தில் பிறந்தவர். அவர் இந்தியப் பத்திரிகையாளரான தவ்லீன் சிங்கிற்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் சல்மான் தசீருக்கும் மகனாகப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்

.

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

.

.

திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!

.

இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!

.

ஞாயிறு, 12 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon