தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!

சினிமா

கமல் ஹாசனின் KH 234 படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் – கமல் கூட்டணி இணைந்திருப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தக் லைஃப் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தக் லைஃப் படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி, நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்துள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணத்தினால் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்கள்.

இதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அந்த புகைப்படத்தில், நடிகர் கமல் ஒரு நடுத்தர வயது நபராக கருப்பு முடி, தாடி என கொஞ்சம் இளமையான தோற்றத்தில் சத்யா படத்தில் பார்த்த கமலை போல் செம மாஸ் ஆக உள்ளார்.

அவருக்கு அருகில் நடிகை அபிராமி கமலை முறைத்தபடி நடந்து வருகிறார். கமலுக்கு பின் புறத்தில் நடிகர்கள் நாசர் மற்றும் வையாபுரி தென்படுகின்றனர்.

இவர்களெல்லாம் ஒருபுறம் இருக்க புகைப்படத்தில் ஒரு ஓரமாக சுவற்றில் சாய்ந்த படி கருப்பு கண்ணாடியுடன் நீள முடியுடன் செம ஸ்டைலாக நடிகர் சிம்பு நின்று கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: மே 15-க்கு ஒத்திவைப்பு!

பியூட்டி டிப்ஸ்: உங்களை அழகாக்கும் பொருட்கள் சமையலறையிலேயே இருக்கு!

ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கியதால் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்!

ஜாபர் சாதிக்குடன் தொடர்பா? – மேடையில் சீறிய அமீர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *