share market: இன்று சனிக்கிழமையும் இயங்குவது ஏன்? என்ன பங்குகள் வாங்கலாம்?

வழக்கமாக பங்குச் சந்தைகள் வெள்ளிக் கிழமையோடு முடிந்து, திங்கள்தான் தொடங்கும். சனி, ஞாயிறு விடுமுறையாகும்.

ஆனால், இந்திய பங்குச் சந்தை இன்று (மே 18) சனிக்கிழமை இயங்குகிறது. ஏனென்றால்… எதிர்பாராத பேரழிவுகளை கையாள்வதற்கான ஆயத்த நிலையை சோதிப்பதற்காக… செபி வழிகாட்டுதல்களின்படி சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு நடத்தப்படுகிறது.

வார இறுதி நாளான சனிக்கிழமையில்  பங்குச் சந்தை திறந்திருப்பது இந்த ஆண்டில் இன்று மூன்றாவது நிகழ்வு. முன்னதாக, இதேபோன்ற சிறப்பு வர்த்தக அமர்வு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமையும் பின்னர் மார்ச் மாதத்தில் மீண்டும் நடைபெற்றது.

அதன்படி இன்று BSE மற்றும் NSE இல் சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு தொடங்கியது.  இன்று காலை  9:15 முதல் 10:00 வரை முதல் அமர்வும் காலை 11:30  முதல் 12:30  வரை இரண்டாவது அமர்வு வரையிலான வர்த்தகம்  நடக்கிறது.

இந்தியப் பங்குச் சந்தைகள் சிறப்பு அமர்வுக்கு மத்தியில் சனிக்கிழமையன்று சாதகமாக நிலையில் துவங்கின. சென்செக்ஸ் 73 புள்ளிகள் 73,990 ஆகவும், நிஃப்டி 36 புள்ளிகள்  அதிகரித்து 22,501 புள்ளியிலும் தொடங்கியது.

JSW Steel, Delhivery, IOC, Bandhan Bank, Zee Data Patterns, Krsnaa Diagnostics, Ujjivan SFB ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சனிக்கிழமை சிறப்பு நேரடி வர்த்தக அமர்வின் போது நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன.

 

காலை முதல் அமர்வில் பவர் கிரிட், ஸ்ரீராம் ஃபின், ஜுப்ல்ஃபுட், டைட்டன், ஹெச்சிஎல் டெக், சன் பார்மா பங்குகள் உயர்வுடன் தொடங்கியது.

Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம்  நான்காவது காலாண்டில் 13 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இன்று சனிக்கிழமை வர்தத்கத்தில் இந்நிறுவன பங்குகள் 4% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்  இந்நிறுவனம் 196 கோடி நட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சில்லறை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் Vodafone Idea, ZEE, Delhivery, Sobha, Zydus Life ஆகிய பங்குகள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

வெற்றிமாறன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம்!

ஜெட் வேகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts