ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 6) விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, “செந்தில் பாலாஜி கடந்த 328 நாட்களாக சிறையில் உள்ளார். எனவே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “இந்த ஜாமீன் மனு மீது பதிலளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள்: உரிமையாளர் கைது!