நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் இன்று (மே 18) இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த ஒரு நன்மையைக் கூட சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை.
ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்து கோவில்களை இடித்துவிடுவார்கள், முஸ்லிம்களுக்கு அனைத்தையும் வாரி வழங்குவார்கள் என்று தான் பிரச்சாரம் செய்து வருகிறார். பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பாஜகவுக்கு என்ன தெரியும்? சமூகத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல் பேசுகிறார். இது பிரதமர் பதவிக்கு அழகல்ல” என்றார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “என் தம்பி சொன்னதையே நான் சொல்றேன். ஐ ஆம் வெயிட்டிங். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால், நிச்சயம் செல்வேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!
ஸ்வாதி மாலிவால் புகார்: கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது!