விரைவில் வீடு திரும்பும் பாரதிராஜா

சினிமா

இயக்குநர் பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, தமிழகத்தின் கிராம வாழ்கையை தனது திரைமொழியின் மூலம் காட்சிப்படுத்தியவர்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை போன்ற முக்கியமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். அண்மை காலமாக திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த இவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.

director bharathiraja discharged soon

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, வைரமுத்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இளையராஜா உள்ளிட்ட திரைபிரபலங்களும், முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்புகொண்டு  நலம் விசாரித்தனர்

director bharathiraja discharged soon

ஆகஸ்ட் 26ஆம் தேதி, மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், “பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க வருவேன்” என்று தெரிவித்திருந்தார்.

பாரதி ராஜா உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் விரைவில் நலம் பெறுவார் என்றும் எம்ஜிஎம் மருத்துவமனை தரப்பில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று செப்டம்பர் 2-ஆம் தேதி  பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

என் இனிய தமிழ்மக்களே… நான் நலமாக உள்ளேன்: பாரதிராஜா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *