டாப் 10 செய்திகள்: கெஜ்ரிவால் போராட்டம் முதல் வானிலை அப்டேட் வரை!

அரசியல்

டெல்லி பாஜக அலுவலகம் முற்றுகை!

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அனைவரையும் பாஜக சிறையில் அடைக்க விரும்புகிறது என்று குற்றம்சாட்டியுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (மே  19) எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் சென்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளார்.

வடபழனி முருகன் கோயில் தேரோட்டம்!

வைகாசி விசாக பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் அப்டேட்!

இன்று ஐபிஎல் போட்டி 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ்- பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன.

கௌகாத்தியில் இரவு 7.30 மணிக்கு எழுபதாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு!

நாகை இலங்கையிடையே இன்று தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 13, 17, 19 தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்ற அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய வெப்பநிலை!

இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஎன் ஜானகி நினைவு நாள்!

இன்று எம்ஜிஆரின் மனைவியும், முன்னாள் முதல்வரும், நடிகையுமான வி.என்.ஜானகியின் நினைவு நாள்.

மோடி –  மம்தா ஒரே நாளில் பிரச்சாரம்! 
பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் இன்று மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பூர்லியா தொகுதியில் பிரச்சாரம் செய்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 64 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை அப்டேட்!

இன்று கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: உப்பு, புளி, காரம் அதிகமாயிடுச்சா… கவலைப்படாதீர்கள்!

RCB vs CSK: ‘6 அபார வெற்றிகள்’… பிளே-ஆஃப்-க்கு சென்ற பெங்களூரு!

கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

கேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யாராய்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *