பியூட்டி டிப்ஸ்: உங்களை அழகாக்கும் பொருட்கள் சமையலறையிலேயே இருக்கு!

டிரெண்டிங்

சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பதை அறிவோம். அதே சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு நம்மை அழகாகவும் மாற்றிக்கொள்ளலாம். உதாரணங்கள் இதோ…

தக்காளி நறுக்கும்போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்திப் பூசுங்கள். வேலை முடியும் வரை (ஒரு மணி நேரம்) அந்த பேக் அப்படியே முகத்தில் வைக்கவும். அதன் பின் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.

வெள்ளரியில் இருந்து ஒரு துண்டை எடுத்து கண்களுக்கு கீழே தேய்த்து தடவினால் கண்களை குளிர்ச்சியாக்கும். முகத்தில் உள்ள கருப்பு கோடுகளை நீக்கும்.

எலுமிச்சை ஜூஸ் செய்யும்போது பிழிந்த எலுமிச்சை மூடியுடன், மோர்/தயிரை சேர்த்து முகத்தில் தேய்த்து, காயவிட்டு பின்னர் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

முட்டைகோஸின் நான்கைந்து இலைகளை அரைத்து, அதன் சாற்றை எடுத்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து இக்கலவையை முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து நல்ல தூய்மையான துணியை எடுத்து தண்ணீரில் நனைத்துப் பிழிந்து துடைத்தால் வறண்ட தோலின் தன்மை மாறி மிருதுவாகும்.

காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து பஞ்சை நனைத்து முகத்தை சுத்தம் செய்தால் அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பழங்களில் பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் என்று தினமும் எதையாவது ஒரு பழத்துண்டு வைத்து முகத்துக்கு ஃபேஷியல் பேக் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் கழித்து உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது வித்தியாசத்தை உணர்வீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

என்னா அடி : அப்டேட் குமாரு

ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் எஸ்ஐடி காவல்!

அதுக்குள்ள இப்டியா? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

இடியாப்ப சிக்கலில் சிஎஸ்கே அணி : மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *