வெயிலுக்கு கொடும தாங்க முடியாம இன்னைக்கு டீக்கடைக்கு பதிலா ஜூஸ் கடைக்கு போனேன்.
அங்க ஜூஸ் மாஸ்டர்… கூட வேல பாக்குற ஒரு பையன போட்டு அடிச்சிட்டு இருந்தாரு.
அத, பாத்ததும், “ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?னு உடனே போய் கேட்டேன்.
அதுக்கு அவரு, “நானே வெயிலு தாங்க முடியாம… இப்போ தான் வந்து உக்காந்தேன். எங்கிட்ட வந்து, ”சூரியன் சுட்டெரிக்குது… அப்ப அக்னி சூரியன்தானே சொல்லணும்… எதுக்கு அக்னி நட்சத்திரம்னு சொல்றோம்?”னு கேட்கிறாம்பா…
அதுசரி அடிக்கிற வெயிலுக்கு ஏற்கெனவே அவிஞ்சி போய் வந்துருக்கிறவரு கிட்ட, சூரியனும் ஒரு நட்சத்திரம் தானு சொன்னா… நம்மளயும் சூஸ் ஆயிடுவாரு அங்கேருந்து நைசா கெளம்பிட்டேன்…
நீங்க அப்டேட் பாருங்க!

மயக்குநன்
விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின் தடையால் கேமராக்கள் செயலிழப்பு!- செய்தி.
போறபோக்கைப் பார்த்தா… கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கிறதுக்கே ஒரு கேமரா வைக்கணும் போலிருக்கே..?!

Mannar & company™????
வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சினைகளை சிரிச்சிக்கிட்டே பேசினா அதுதான்
“நீயா நானா”,
அதையே சீரியஸா பேசினா அதுதான்
“சொல்வதெல்லாம் உண்மை”

கரிகாலன்
டீ கடைக்காரரால் என்ன செய்ய முடியும் என்று என்னை காங்கிரஸ் விமர்சித்தது! – மோடிஜி
இப்படி மக்களை ஆவி பறக்க ஆத்துவீங்கன்னு நினச்சி பாத்துருக்க மாட்டாங்க!

கடைநிலை ஊழியன்
“இந்த வெயில்’ல கறிக்கடைக்கு போகணுமா”
என்ற மனநிலைக்கு தள்ளுகிறது இந்த கத்திரி வெயில் !!

Kirachand
வெயில் சுட்டெரிச்சாலும் சூடா டீ குடிச்சிக்கிட்டு இருக்கீங்களேடா…யாருடா நீங்கெல்லாம்?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஸ்லோ பால் பார்த்துருப்பீங்க, ஆனா சான்ட்னர் மாதிரி ஸ்லோ பவுலர் பார்த்துருக்கியா.. பார்த்துருக்கியா..?
ரெண்டு ஸ்டெப் தான் வைக்கறான் ஆனா ரெண்டு நிமிசமா வர்றான்.. பேட்ஸ்மெனை வெயிட் பண்ணி டயர்டாக்கி அவுட் ஆக்கற திட்டம் போல..

Sasikumar J
என்னடா லாரிக்கு அடியில வந்து வண்டியை விட்டு இருக்கே…
வெயில் ஜாஸ்தியா இருக்குன்னு கொஞ்ச நேரம் பார்க் பண்ணலாம்னு வந்தேன்…

ℳsd இதயவன்
நான் வறுமையில் வாடினேன்; ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என எனக்கு தெரியும் ~பிரதமர் மோடி
அப்ப ஏழைகளின் கஷ்டம் தெரிந்து தான் சாப்பிடுற சாப்பாட்டுக்கும் ஜிஎஸ்டி போட்டிங்க ?!