update kumaru December 8
அண்ணே ஒரு ‘பால் டீ போடுங்கண்ணே’ னு சொல்லிக்கிட்டே ஒரு வடையப் பிச்சுத் தின்னுக்கிட்டிருந்தேன்.
அப்ப ஒரு டீக்குடிமகன் பேப்பரைப் பாத்துக்கிட்டே…. ‘ஏம்ப்பா சென்னையில ஒரு கோடி பேர் இருக்காங்கப்பா. எல்லார் ஏரியாவுக்கும் போய் நிவாரணம் கொடுக்க முடியுமா?’னு மாஸ்டர்கிட்ட வாதாடிக்கிட்டிருந்தாரு.
அப்ப மெல்ல நான் அவர் பக்கத்துல போயி, ‘ஏண்ணே…தேர்தல் நேரத்துல ஒரு சந்து பொந்து கூட விடாம இண்டு இடுக்கெல்லாம் போறீங்களே…ஓட்டு கேட்கும்போது முடியுறது இப்ப நாங்க, ‘போட்’ கேக்கும்போது மட்டும் ஏண்ணே முடியலை?’னு கேட்டேன்.
டீக்கடை மாஸ்டர் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு, ‘நீங்க கெளம்புங்க. கடை தப்பிக்கட்டு’னு சொன்னாரு. நான் கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ட பாருங்க…
Writer SJB
பயணிகளின் கனிவான கவனத்திற்கு..
வேளச்சேரியில் இருந்து சென்னை பீச் வரை செல்லும் விரைவு படகு
இன்னும் சற்று நேரத்தில் பிளாட்பாரம் ஒன்றில் வந்து சேரும்..!
Cheems..
#டிசம்பர் மாசம் முடிய இன்னும் 23 நாள் இருக்கு, அதுக்குள்ள மழை, புயல், வெள்ளம், நில நடுக்கம் எல்லாம் பாத்தாச்சு..
ரைட்ரா ரைட்டு இருந்தா பூமிக்கு, இல்லனா சாமிக்கு!
Manjari
நேத்தே வந்திருந்தா போட் விட்டு ஷோ காட்டி இருக்கலாம்
அதுக்குள்ள தண்ணி வடிஞ்சு போச்சு வாத்தியாரே..!
கடைநிலை ஊழியன்
என்னடா 2023 முடிய போகுது எல்லாம் நார்மலா போகுதுனு நினைச்சேன்..
டேய் டிசம்பர்.. உன்னால என்ன பன்ன முடியுமோ, புயல் வெள்ளம்னு நல்லா பண்ணிட்ட..!
Mannar & company
மன்னார்குடிக்கு மட்டுமே தலைநகரமாக தகுதி இருக்கிறது.
சின்னம்மா ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் மாத்திருப்போம்!
Black Phanther
தம்பிகள்: 4000 கோடி என்ன செய்தது திமுக?
Me: என்ன டா செஞ்சி இருக்கணும்?
தம்பிகள்: 4000 கோடி ரூபாய்க்கு ஒரு பெரிய தார்ப்பாய் வாங்கி சென்னையை மூடி இருக்கலாம்.
மெக்கானிக் மாணிக்கம்..
“இதோ மழை சேதத்தை பார்வையிட வருகிறார் நம் தன்னலமற்ற தலைவர்.”
“டேய் நானே வெத்தலை பாக்கு, சீவல் வாங்க போய்ட்டு இருக்கேண்டா..!
MS Dhoni
வரான் சென்னை பேக் டூ நார்மல் ன்னு டுவிட் போடுறேன்
எந்த ஏரியா ப்ரோன்னு கேட்டா கேம்ப் துபாய்னு சொல்றான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி
ஃபிளைட் கிளப் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
update kumaru December 8