Is Beauty IV therapy can be benefit to everyone?
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், ஊட்டச்சத்தினை அளித்தல், ஹேங் ஓவர் மாதிரியான செயற்கை மயக்கத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவது போன்றவைகளுக்காக இன்ட்ராவீனஸ் (Intravenous) எனப்படும் ‘ஐவி தெரபி’ பயன்படுத்தப்படுகிறது. தற்போது அழகு சிகிச்சையிலும் டிரெண்டாகி வரும் இந்த ஐவி தெரபி எல்லோருக்கும் ஏற்றதா?
“இன்ட்ராவீனஸ் என்பது பலவிதமான மருத்துவ சிகிச்சை முறைகளில் முக்கியமான ஒன்று. இதன் மூலம் காய்ச்சல், வயிற்றுவலி, சத்துக்குறைபாடு, நீரிழப்பு என எந்த விதமான சிகிச்சைகளையும் ஒருவருக்கு அளிக்கலாம். அதற்குள் செலுத்தப்படும் மருந்துகளின் தன்மையைப் பொறுத்து ஐவி மாறுபடும்.
அழகுக்கான ஐவி தெரபியில் குளுட்டதயோன் என்ற மூலக்கூறு முக்கியமாக இடம்பெறுகிறது. ஐவி தெரபி லேட்டஸ்ட் சிகிச்சையாக தற்போது பேசப்பட்டாலும் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளிலும், திரைத்துறை பிரபலங்களிடமும் அறிமுகமான ஒன்றுதான்.
இந்த குளுட்டதயோன் ஐவியின் மூலம் அளிக்கும்போது, நம் உடலில் கறுப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மெலோனோசைட்டுகளை (Melanocytes) கட்டுப்படுத்தும். இதன்மூலம் சருமம் பளபளப்பாக மாறும்.
குளுட்டதயோன் ஸ்பிரேயாகவும், மாத்திரைகளாகவும், ஃபேஷியல் க்ரீமாகவும் கூட பல வடிவங்களில் கிடைக்கிறது. பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், டிரிப்ஸ் வடிவில் எடுத்துக் கொள்ளும்போது மிகுந்த கவனம் தேவை.
ஐவி தெரபி அளிக்கும் முன்பு சிகிச்சை பெற வந்தவரின் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதித்து, அதற்கேற்பவே சிகிச்சை அளிக்க வேண்டும். ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் நிலையைக் கருத்தில் கொண்டே டோஸ் அளிக்க வேண்டும்.
ஐவி தெரபியில் இன்னும் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் இருப்பதால், FDA அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் குளுட்டதயோனைப் பயன்படுத்துவதும் பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
மிகக் குறுகிய இடைவெளிகளில் ஐவி தெரபி எடுத்துக் கொள்வது ஆபத்தானது. அதேபோல் ஐவி தெரபியில் அதிக டோஸ் எடுத்துக் கொள்வதும் பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
ஏனெனில், நாம் அளிக்கும் மருந்துகள் கல்லீரலில்தான் வளர்சிதை மாற்றம் (Metaboloize) அடைகின்றன. இதனால் கல்லீரல் கோளாறு உண்டாகும் அபாயம் ஏற்படும்.
முக்கியமாக, ஐவி தெரபியை முறையான உள்கட்டமைப்பு கொண்ட மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்வதே நல்லது. சிகிச்சையின்போது ஏதேனும் அவசர கால சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தகுதியான நிபுணர்களும், மருத்துவக் கட்டமைப்புகளும் அவசியம்.
சின்னச்சின்ன கிளினிக்குகள் அல்லது பார்லர்களில் ஐவி தெரபி எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்கள் நம்மூர் மருத்துவ நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் சாதி காம்போ… அதுக்கும் மேல, சபரீசன் ஆக்ஷன் பிளான்!
கோயம்பேடா..? கிளாம்பாக்கமா..? ஊரா..?: அப்டேட் குமாரு
துணை முதல்வர் பதவி : உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
மிரட்டும் மம்மூட்டி… பிரமிக்க வைக்கும் பிரமயுகம் டீசர்!
Is Beauty IV therapy can be benefit to everyone?