கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “8 தோட்டாக்கள்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ்.
இந்த படத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 8 தோட்டாக்கள் வெற்றிக்கு பிறகு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் ஆக்சன் திரைப்படமாக வெளியான “குருதி ஆட்டம்” எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக நடிகர் சித்தார்த்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு சித்தார்த்தின் அடுத்த படத்தை எந்த இயக்குநர் இயக்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது சித்தார்த் அடுத்த படத்தின் இயக்குநர் ஶ்ரீ கணேஷ் தான் என்பது உறுதியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தான் ஶ்ரீ கணேஷ் – சித்தார்த் கூட்டணியில் உருவாகும் சித்தார்த் 40 படத்தை தயாரிக்கிறது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு நடிகர் சித்தார்த், இயக்குநர் ஶ்ரீ கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் இந்த கூட்டணியில் குறித்து ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் கொரோனா அலை: சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!
டாப் 10 செய்திகள்: கெஜ்ரிவால் போராட்டம் முதல் வானிலை அப்டேட் வரை!
பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு தயாரான சூர்யாவின் கங்குவா.. ரிலீஸ் தேதி இதுவா..?