‘நான் நன்றாகத்தானே இருக்கிறேன். எனக்கு எதற்கு உடற்பயிற்சி’ என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உடல் என்பது இயக்கத்துக்காகவே படைக்கப்பட்டது. அதற்கென செயல்பாடுகள் தேவை.
விலங்குகள் எப்படி தனது இரையைத் தேடிச் சென்று வேட்டையாடி உண்கின்றனவோ, அதேபோல் மனிதனும் தனது உணவைப் பெற அப்படி வேட்டையாடிதான் உண்டு வந்தான். அப்போது உடலின் திறன் சிறப்பாகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரிணாமம் காரணமாக வாழ்க்கை முறை மாறிவிட்டது. உடலுக்கு இயக்கம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இன்று உடற்பயிற்சி அவசியமானதாக உள்ளது.
உணவின் மூலமே உடல்நலனைப் பராமரிப்பதாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற செயலற்ற தன்மையால் எதிர்காலத்தில் வாழ்க்கைத்தரம் குறையும் வாய்ப்பு உண்டு. மற்றவரை எதிர்பார்த்து முதுமைக்காலத்தில் வாழ்வது கொடுமையானது. எனவே, நம் உடலுக்கு மரியாதை கொடுத்து அதன் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்.
மேலோட்டமாகப் பார்த்தால் 90 சதவிகித மக்கள் உடற்பயிற்சி செய்வதில்லை என்று கூறினாலும் கூட, சுமார் 50 சதவிகித மக்கள் ஏதேனும் ஒரு வகையில் உடல்சார்ந்த ஆக்டிவிட்டியில் ஈடுபடுகிறார்கள். நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது, கடுமையான வேலைகள் செய்வது என்று ஏதேனும் மறைமுகமாகவாவது உடல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்கிறார்கள்.
உடற்பயிற்சி அவசியம் என்றவுடனே ஜிம்முக்கு சென்று பணம் கட்டி அடுத்த நாளே உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு விருப்பமான, வசதியான நடவடிக்கைகளில் இருந்து செயல்பாட்டைத் தொடங்குங்கள். உடல் சார்ந்த ஏதேனும் ஒரு செயல்பாட்டில் இறங்கினால்தான் உங்களுக்கு என்ன தேவை என்பது புரியும். அதன் பிறகு அடுத்த கட்டமாக உங்களுக்கான உடற்பயிற்சியை முடிவெடுத்துக் கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!
மீண்டும் கொரோனா அலை: சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!
டாப் 10 செய்திகள்: கெஜ்ரிவால் போராட்டம் முதல் வானிலை அப்டேட் வரை!
பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு தயாரான சூர்யாவின் கங்குவா.. ரிலீஸ் தேதி இதுவா..?