leo in karnataka vijay audio is fake

விஜய் குரலில் பரவும் ஆடியோ : புஸ்ஸி ஆனந்த் மறுப்பு!

சினிமா டிரெண்டிங்

லியோ படத்தை கர்நாடகாவில் வெளியிடப்போவதில்லை என்று பரவும் ஆடியோ போலியானது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

டெல்டா பாசனத்திற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகா அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் ‘சித்தா’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கன்னட அமைப்பினர் தமிழ் படங்களை இங்கு வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் சித்தார்த்தை வெளியேற வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.

இதனால் செய்தியாளர்களுக்கு சிரித்தபடியே நன்றி தெரிவித்து விட்டு நடிகர் சித்தார்த் மேடையில் இருந்து இறங்கி சென்று விட்டார். கன்னட அமைப்பினரின் இந்த செயலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டனர்.

இந்நிலையில், “எல்லோருக்கும் வணக்கம், நான் உங்கள் விஜய் பேசுகிறேன். தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சினை காரணமாகவும் நடிகர் சித்தார்த்தைத் தாக்கிய கன்னட அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் என் ‘லியோ’ படத்தை நான் கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை.

இதனை கர்நாடகா மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் 2026-ல் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்” என்று விஜய் பேசுவது போன்ற ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகியது.

ஆனால் விஜய் பேசுவதாக பரவும் ஆடியோ போலியானது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆடியோ பரப்பியது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.

மோனிஷா

கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!

நயன்தாராவின் “9 SKIN” – வைரலாகும் புது பிராண்ட்!

டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு… சிறப்பு முகாம்கள்… : மா.சுப்பிரமணியன் பேட்டி!

கன்னடரே எம் சோதரரே !

+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *