“ரகசிய திருமணமா?”: நடிகை ஜெயசுதா விளக்கம்!

சினிமா

நடிகை ஜெயசுதா(64), தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில், பாலசந்தர் இயக்கிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அரங்கேற்றம்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், இப்போது அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இவர் வடே ரமேஷ் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார், இதையடுத்து நிதின் கபூர் என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டார் ஜெயசுதா.

ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் கடந்த 2017-ம் ஆண்டு மரணமடைந்தார். கணவரின் மரணத்துக்கு பின் மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் ஜெயசுதா.

ஜனவரி 11 அன்று வெளியான வாரிசு படத்தில் அம்மா வேடத்தில் நடித்துள்ளார் அப்படத்தின் விளம்பர நிகழ்வுகளில் ஜெயசுதா கலந்து கொண்டார்.

Jayasuda was going to marry

அப்போது அவருடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெலிப் ரூவல்ஸ் உடன் வந்திருந்தார். இந்நிலையில் அவரை ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது.

இது குறித்த விளக்கம் அளித்த அவர், அந்த நபர் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் தன்னுடன் பயணித்து வருவதாகவும் தெரிவித்து திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இராமானுஜம்

இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில்: மோடி

சிறுத்தை சிவா சகோதரர் வீட்டில் தாக்குதல்!

+1
2
+1
3
+1
0
+1
1
+1
2
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *