விவோவின் பிளாக்பஸ்டர் 5ஜி: அப்படி என்னய்யா போன் அது ?

டிரெண்டிங்

ஆகா இப்படி ஒரு மொபைல் விலைக்கு வருதா, இதல்லவா மொபைலு, ஆமாங்க, விவோவின் அடுத்தகட்ட முயற்சியாக இந்தியாவில் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி (Vivo Y200 Pro 5G) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது இந்த மொபைல் ஓட ஸ்பெசிபிகேஷன் பற்றி எக்ஸ் தளத்தில் ஒரு சிறு முன்னோட்டமும் விட்ருக்காங்க. அது இப்போ செம ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. மிக விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

முக்கியமா இது டூயல் ரியர் கேமராவுடன் ஆண்ட்ராய்டு 14 மற்றும் 3டி கர்வ்ட் டிஸ்பிளேயுடன் விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போன் வெளிவரும் என்ற செய்தி மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆன்லைனில் வெளியான இந்த விவோ ஒய்200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்ல என்னென்ன அம்சங்கள் இருக்குனு பார்த்தா? மே.22 மிரட்ட போறாங்க.. 5500mAh பேட்டரி, கேமிங் பில்ட், 120W சார்ஜிங் உடன் 6000 நிட்ஸ் டிஸ்பிளே.

விவோ ஒய்200 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y200 Pro 5G specifications):

அதிக சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் இடம்பெற்றுள்ளது . இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்டவேகத்துடன் மிக ஆற்றல் வாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும். பின் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இது வெளிவரும். எனவே, இந்த மொபைலில் அனைத்து அப்ளிகேஷன்களையும் எந்த ஒரு சிரமம் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

அத்துடன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த மொபைலுக்கு வழங்கப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த மாடலில் சிறப்பம்சமாக மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

-கணேஷ்.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உயிர் உங்களுடையது தேவி… த்ரிஷாவின் அழகை ஆராதித்த ’லேசா லேசா’  

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசில் ராதிகா புகார்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *