நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்…
அவருக்கிட்ட, “நம்ம ஜி கர்நாடகாவுல பிரச்சாரம் செய்யுறப்போம் கர்நாடகா நம்பர் 1 ஸ்டேஸ்ட் ஆக்குவோம்னு சொல்றாரு, ஒடிசா போனா ஒடிசா நம்பர் 1, தெலங்கானா போனா தெலங்கானா நம்பர் 1ன்னு சொல்றாரு… இந்தியாவுல எத்தனை நம்பர் 1 ஸ்டேட்ட தான் உருவாக்க முடியும்?” ன்னு கேட்டேன்.
அதுக்கு அவரு… “இதுக்கு பேருதான் கலர் கலரா ரீல் விடுறதுன்னு” சொன்னாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
தெரிந்தவரிடம் ராயல் என்பீல்டை ஒரு ரவுண்ட் கேட்க தனி தைரியம் வேண்டும்

கோழியின் கிறுக்கல்!!
ஆசைகளை துறந்தவன் ஞானி… ஆசைகளை மறந்தவன் கணவன்!!

கடைநிலை ஊழியன்
மே மாசம் கடைசி ரெண்டு வாரம் பாருங்க எப்படி அடிக்க போகுது னு.. வெயில் ரொம்ப அடிக்குமா.. அதான் இல்ல.. மழை அடிக்கும்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நான் நேற்றைய நாளை பத்தி நினைச்சு கவலைப்படறவன் கிடையாது மாமா அவ்வளவு பாசிடிவ் ஆட்டிடியூடா மாப்ள? பாசிடிவ் ஆட்டிடியூடா..? எப்படியும் நேத்தை விட பெரிய பிரச்சனை எதாவது இன்னைக்கு நடக்கத்தான் போகுது, அதை சமாளிக்கவே நேரம் போதப்போறதில்லை, அப்புறம் எங்கிருந்து நேத்தை பத்தி கவலைப்படறது?

குருநாதா
படத்துல இண்டர்வல் இல்லாம எடுத்துவச்சிருக்கிங்க? இனி எவனும் first half நல்லால்ல second half நல்லால்லனு சொல்ல மாட்டானுக சார்

ச ப் பா ணி
பணம் இப்ப கட்டுறீங்களா அப்புறம் கட்டுறீங்களா னு கேட்பது பெளலிங்கா?ஃபீல்டீங்கா என்கிற தொனியிலேயே கேட்கப்படுகிறது
லாக் ஆஃப்