தமிழ் சினிமாவின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த “இறைவன்” படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒருபுறம் வித்தியாசமான கதைகளில் நடித்து மாஸ் காட்டும் நயன்தாரா, மற்றொரு புறம் பல புதிய தொழில்களைத் தொடங்கி ஒரு தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் “9ஸ்கின்” என்ற ஓர் புதிய அழகு சாதன நிறுவனத்தை நயன்தாரா லாஞ்ச் செய்துள்ளார்.
செப்டம்பர் 29ஆம் தேதி 9 ஸ்கின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ஆன்ட்டி ஏஜ் சீரம், நைட் கிரீம், டே கிரீம் உள்ளிட்ட மொத்தம் ஐந்து பொருட்களை மலேசியாவில் லாஞ்ச் செய்து விற்பனையைத் தொடங்கியுள்ளனர். இந்த லாஞ்சில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
மேலும் 9 ஸ்கின் பிராண்டை ப்ரோமோட் செய்வதற்காக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தொடர்ந்து ப்ரோடக்ட் குறித்த விவரங்களைப் பதிவிட்டு வருகிறார்.
– கார்த்திக் ராஜா
எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் செய்யப்பட்டது!
சென்சார் போர்டு விவகாரம்: மோடிக்கு நன்றி தெரிவித்த விஷால்