மே 15 புதன்கிழமை (நேற்று) மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 117.58 புள்ளிகள் குறைந்து 72987.03 புள்ளியிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 17.30 புள்ளிகள் குறைந்து 22200.55 புள்ளியிலும் முடிவடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.04 சதவீதம் குறைந்து 83.49 ரூபாயில் முடிவடைந்தது.
பவர் ஃபைனான்ஸ் கார்ப், மேன்கைன்ட் பார்மா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், ஜோதி லேப்ஸ், என்சிசி, கிளீன் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி, டிதாகர் ரெயில் சிஸ்டம்ஸ், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், சிஎம்எஸ் இந்தியா கிளாஸ், இன்ஃபோ சிஸ்டம்ஸ், ரெடிங்டன், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கிரானுல்ஸ் இந்தியா, மொயில், பரதீப் பாஸ்பேட்ஸ், ஐசிஆர்ஏ, பிட்டி இன்ஜினியரிங், சோமனி செராமிக்ஸ், ப்ரிகோல் மற்றும் என்எல்சி இந்தியா ஆகிய நிறுவனங்கள் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்தன.
டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் விலை குறைந்தும், பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன், என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டின.
NSDL தரவுகளின் படி கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான வர்த்தகத்தில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) ரூ.25,280 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்பனை செய்து வெளியேறி உள்ளனர்.
ஜின்டால் ஸ்டீல் நிறுவனம் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வரிக்கு பிந்தைய நிகர லாபமாக 501 கோடி ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் அறிவித்த வரிக்குப் பிந்தைய லாபமான 716.29 கோடியை விட இது (PAT) 30% குறைவு என்று தெரிவித்துள்ளது.
மேன்கைண்ட் ஃபார்மா நிறுவனம் நான்காவது காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபமாக 477 கோடி ஈட்டியதாகவும், முந்தைய ஆண்டில் ஈட்டப்பட்ட294 கோடியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 62.2% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நான்காவது காலாண்டில் HDFC ஆயுள் காப்பீடு நிறுவனம் 411.66 கோடி ஈட்டியதாகவும்.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட 358.66 கோடியை கணக்கிடும் போது இது 14.7 சதவீதம் அதிகம் எனவும்,தனது பங்கேற்பு திட்டங்களில் (Participated with Bonus schemes) உள்ள 22.23 லட்சம் பாலிசிதாரர்களுக்கு ஹெச்டிஎஃப்சி ஆயுள் காப்பீடு நிறுவனம் 3,722 கோடியை போனஸாக அறிவித்துள்ளது.
மஹிந்த அண்டு மஹிந்திரா (M&M) நான்காவது காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்க உள்ள நிலையில் நேற்று M&M பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச மதிப்பாக 2,317.50 ரூபாய் வரை உயர்ந்து வர்த்தகமாகியது
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைப் பொறுத்தவரை இந்நிறுவனத்தின் வருவாய் 8% வரை உயர்ந்தாலும். அதீத செலவினங்கள் காரணமாக லாபம் சற்று குறையலாம் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணி சரக்கு வாகன உற்பத்தியாளரான Titagarh Rail Systems நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டியதை விட 64 சதவீதம் உயர்ந்து 79 கோடியாக உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Indian Emulsifiers நிறுவனத்தின் ஐபிஓ விற்பனை தொடங்கப்பட்ட 3வது நாளில் 100 மடங்கு முன்பதிவு செய்யப்படுள்ளது.இன்று கடைசி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் நான்காவது காலாண்டில் 95.17 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாத தெரிவித்துள்ளது .
பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.222.62 கோடி லாபம் ஈட்டியதாத பதிவு செய்துள்ளது.ஜோதி லேப்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் 78.16 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 7556.43 கோடி லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ABB Power, Thermax, Siemens, Timken India, Linde India, Vijaya Diagnostic, மற்றும் CG Power and Industrial Solutions நிறுவனங்களின் பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.
இன்று என்னென்ன?
அதானி குழுமத்தின் மல்டிபேக்கர் ஆஃபரான அதானி பவரின் பங்குகள் மே 16 அன்று ரூ.652 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது, இது நாட்டில் கோடைக்காலத்தில் உச்சக்கட்ட மின்தேவையால் உயர்ந்தது. இன்றைக்குள் ரூ 800 என்ற அளவுக்கு உயரலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
வோடபோன் ஐடியா நிறுவனம் நான்காவது காலாண்டு முடிவுகளை இன்று வியாழக்கிழமை அறிவிக்க உள்ள நிலையில். வோடபோன் ஐடியாவின் நிகர இழப்பு மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் அதிகரித்திருக்கலாம் என்று பங்கு தரகர்கள் கணிக்கின்றனர்.
இந்நிறுவனத்தின் இழப்பு சுமார் ரூ.7,307.20 கோடி முதல் ரூ.7,680 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது காலாண்டில் அதன் வருவாய் ரூ.10,690 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் -0.45% குறைந்து 13.19 ரூபாயில் முடிந்தது.
மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் பெரிய வங்கிகளின் முடிவுகள் எதிர்பார்த்த அளவு அதிக லாபம் இல்லாததால்.நடப்பு நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு வங்கிப் பங்குகள் மீண்டும் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதன்படி பொதுத்துறை வங்கிகளான SBI, J&K Bank. Bank of Baroda மற்றும் தனியார் வங்கிகள் ICICI Bank, Karur Vysya and Axis Bank பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மணியன் கலியமூர்த்தி
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : மோடி கண்டனம்!
‘புழு’-வால் கிளம்பிய சர்ச்சை : மம்மூட்டிக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆதரவு!