உணவுப்பொருள்களை அதிக எண்ணெய், அதிக மசாலா சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதுதான் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம். மேலும், ஒரு நாளைக்குத் தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மலச்சிக்கலுக்குத் தீர்வாக விளம்பரங்களில் வரும் மாத்திரை, மருந்துகள் குடலை அசைக்கக்கூடியவை. அந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால்தான் மலம் கழிக்க முடிகிறது என்ற பழக்கம் சிலருக்குண்டு. அதைத் தவிர்ப்பது நல்லது.
உணவில் நார்ச்சத்து அதிகமிருக்கும்போது மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே, காலை, மதியம், இரவு உணவுகளுடன் காய்கறிகள் அவசியம் இருக்க வேண்டும். முற்பகல் 11 மணி அளவில் சிறிதளவு பழங்கள் சாப்பிடலாம். மாலை 4 மணி வாக்கில் சுண்டல் சாப்பிடலாம். இப்படிச் செய்தாலே மலச்சிக்கலில் இருந்து மீளலாம்.
தண்ணீர் குறைவாகக் குடிப்பது அல்லது தண்ணீரே குடிக்காதது, அதிக அளவில் அசைவம் சாப்பிடுவது, காய்கறி, பழங்கள் சாப்பிடாதது போன்றவற்றால் மலம் இறுகிப்போய் கல் போல மாறும். அது காலப்போக்கில் மூல நோயாக மாறலாம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சியின் மூலம் குடலை அசையச் செய்யலாம். அதனால் மலச்சிக்கல் சரியாகும்.
முதியவர்களைப் பொறுத்தவரை, வயோதிகம் காரணமாக அவர்களின் உணவு குறைந்துவிடுகிறது. அதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாகிறது. அந்நிலையில் அவர்கள் காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
அக்னி நட்சத்திரம் டூ ஆரஞ்ச் அலர்ட்: அப்டேட் குமாரு
கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்: 13 மாவட்டங்களில் இன்று கனமழை!