Clint Eastwood gave a surprise

ஜிகர்தண்டா XX பட குழுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்!

சினிமா

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். Clint Eastwood gave a surprise

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சமீபத்தில் இந்த படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதை அடுத்து ஜிகர்தண்டா 2 படத்தை சமூக வலைத்தளங்களில் மீண்டும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.

கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு தெரியும்!

இந்நிலையில் விஜய் என்ற ரசிகர் ஒருவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை டேக் செய்து, “அன்புள்ள @RealTheClint நாங்கள் இந்தியர்கள். நாங்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கி உள்ளோம். அதனை இப்போது நெட்ஃபிளிக்ஸில் காண முடியும். முழுப் படத்திலும் உங்களுக்கு ஒரு சிறந்த மரியாதை அளித்துள்ளோம். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

https://twitter.com/RealTheClint/status/1734991509605220408

ரசிகரின் இந்த பதிவுக்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட் அட்மின் பதில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹாய். கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பணிகள் முடிந்ததும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்ப்பார். நன்றி” என தெரிவித்துள்ளார்.

நம்ப முடியவில்லை – கார்த்திக்

இந்த பதிவை கண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “வாவ். நம்ப முடியவில்லை.  லெஜண்ட் கிளின்ட் ஈஸ்ட் வுட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பற்றி அறிந்திருக்கிறார் & விரைவில் பார்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் அவருக்கு நான் செலுத்திய இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு. படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்ட்வுட்டின் கருத்திற்காக காத்திருக்க முடியவில்லை. இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. இப்போதுஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், “மிக்க நன்றி கிளின்ட் ஈஸ்ட்வுட் சார்.  இந்த படம் உங்களை சென்றடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

நானும், நடிகர் ராகவா லாரன்சும் உங்களது தீவிர ரசிகர்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உங்களது மிக தீவிரமான ரசிகர்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்சும் தனது பங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

 கார்த்திக் ராஜா

”பொதுச்செயலாளராக பிரேமலதா” : தேமுதிக பொதுக்குழு தீர்மானம்!

தென்காசியில் கிராஃபைட்: ஏல அறிவிப்பு விட்ட ஒன்றிய அரசு… போராட்ட அறிவிப்பு விட்ட துரை வைகோ

Clint Eastwood gave a surprise

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0