கோதுமை பக்கோடா

கிச்சன் கீர்த்தனா : கோதுமை பக்கோடா

தமிழகம்

மாலை நேரச் சிற்றுண்டிக்கு வழக்கமாக சாப்பிடும் சிற்றுண்டி வகைகளான வடை, சமோசா, சுண்டல் ஆகியவற்றை விட வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்க விரும்புபவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான இந்த கோதுமை பக்கோடா செய்து சாப்பிடலாம்

என்ன தேவை?
கோதுமை மாவு – 200 கிராம்  

ராகி மாவு – 100 கிராம்  

கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்  

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)  

கொத்தமல்லித்தழை – 4 டீஸ்பூன் (நறுக்கியது)

கறிவேப்பிலை – 4 டீஸ்பூன் (நறுக்கியது)  

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)  

இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்  

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்  

எண்ணெய் – தேவையான அளவு  உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? 

எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக ஒரு பவுலில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும், பிசைந்து வைத்த மாவை எண்ணெயில் பிய்த்துப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மூங்தால் ஃபிங்கர்ஸ்

கிச்சன் கீர்த்தனா: அஜீரணமா…  எந்த உணவை எடுத்துக்கொள்வது, எதைத் தவிர்ப்பது?

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *