cauvery water supreme court

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 21) விசாரணைக்கு வருகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிடவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கன அடி நீர் என்பது தமிழகத்திற்கு போதாது. விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்தசூழலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிடக்கோரி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தனர். கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா

அந்த மூணு பேரு நிலைமை: அப்டேட் குமாரு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts