கேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யாராய்

சினிமா

இந்திய சினிமா திரையுலகில்  ஒரு படத்தின் கதை பிடித்தால் மட்டுமே அதில் ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை.

அந்த வகையில் தமிழில் கடைசியாக இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்கிற கதாபாத்திரத்திலும், ஊமை ராணி என்கிற வேடத்திலும் நடித்திருந்தார்.

50 வயதிலும் இளம் புதுமுக நடிகைகளுக்கு போட்டியாளராக இருந்து வரும் ஐஸ்வர்யா ராய்யை தற்போதும் ஹீரோயினாக நடிக்க வைக்க இயக்குநர்கள் முயற்சித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர் ஐஸ்வர்யா ராய் முக்கியமான திரைப்பட விழாக்களுக்கு அழைக்கப்படுவது, அல்லது கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் உலக சினிமாவில் கெளரவம் மிக்கதாக மதிக்கப்படுவது ஒவ்வொரு வருடமும் பாரிசில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா. இந்த விழாவில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அந்த வகையில் மே 17-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை பாரிசில் நடக்கும், கேன்ஸ் 77-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆரத்தியாவுடன் கடந்த மே 16-ஆம் தேதி பாரிசுக்கு சென்றடைந்தார்.

இந்தியாவில் இருந்து கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் கையில் கட்டோடு காணப்பட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் கருப்பும் மற்றும் தங்க நிற உடையில் நடந்து வந்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இரண்டாவது நாளாக நடைபெற்ற ரெட்கார்பெட் நிகழ்வில் தோகை விரித்தாடும் மயில் போல் ஜொலிக்கும் உடை அணிந்து வந்திருந்தார். இந்த புகைப்படம்  சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தவெக-வுடன் கூட்டணியா? – விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0