குறைந்தது தங்கம், வெள்ளி விலை!

Published On:

| By Jegadeesh

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக விலை சவரனுக்கு 44 ஆயித்தை தாண்டியது.

நேற்று (பிப்ரவரி 2 ) ஒரே நாளில், ரூ.720 விலை உயர்ந்து 44,040 ரூபாயாக விற்பனையானது தங்கம்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 3 ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 குறைந்து 5,802 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 520 ரூபாய் வரை குறைந்து 46,416 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

At least the price of gold and silver

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குஇறைந்து 5,440 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 520 ரூபாய் வரை குறைந்து 43,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.40 குறைந்து 76.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 76,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எடப்பாடியையும், பன்னீரையும் இணைக்க முயற்சி: பாஜக!

தேர்தல் ஆணையம் பதில்: அதிமுக கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel