கிச்சன் கீர்த்தனா : மூங்தால் ஃபிங்கர்ஸ்

Published On:

| By Minnambalam

முங்தால் பிங்கர்ஸ்

அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பும் உணவு வகை பிஷ் ஃபிங்கர்ஸ். இதை ஹோட்டலில் வாங்கி ருசித்து இருப்பீர்கள். அதே சுவையுடன் சைவ பிரியர்களும் வீட்டிலேயே செய்து சாப்பிட இந்த மூங்தால் ஃபிங்கர்ஸ் உதவும்.

என்ன தேவை?
பாசிப்பருப்பு – 200 கிராம்  
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)  
பிரெட் – 4 ஸ்லைஸ்  
கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்  
கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன் (நறுக்கியது)  
பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன் (நறுக்கியது)  
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்  
சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்  
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்  
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். இதனுடன் பிரெட், கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசைந்து விரல் நீள அளவுக்கு பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும், தீயை மிதமாக்கி பருப்பு உருண்டைகளைச் சேர்த்து முறுகலாகப் பொரித்தெடுக்கவும்.

பனீர் குர்குரே!

”குப்பை கொட்ட நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன்”  வடிவேலு ஸ்டைலில் விழிப்புணர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share