அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 28) விசாரிக்கிறது.
தேர்தல் பிரச்சாரம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுநகர், மதுரை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வேட்புமனு பரிசீலனை!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
அமலாக்கத்துறை சம்மன்!
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சுப்பிரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாணம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி திருவிழா திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடு ஜீவிதம் ரிலீஸ்!
பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்திவிராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்!
மகளிர் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் தொடங்குகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், டெல்லி மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: கோடையில் மேக்கப் கலையாமல் இருக்க…