K. Rajan on song copyrights

”அவரு இசைஞானி தான்… ஆனா பாடல் எங்களுக்கு தான் சொந்தம்” : கே.ராஜன் பளீச்!

சினிமா

ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் தயாரிக்க உள்ள படம் குற்றம் தவிர். ரிஷி ரித்விக் ஆராத்யா,சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தொடக்க விழா நேற்று (மே 3) சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்.

அவர், “நாட்டில் உள்ளவர்கள் குற்றங்களைத் தவிர்த்து நல்லதை நினைத்து நல்லதைப் பேசி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் குற்றம் தவிர் என்கிற கதையை இயக்குநர் அமைத்திருக்கிறார்” என்றார்.

கொத்தனார் உரிமை கொண்டாடினால் முட்டாள் தனம் தானே?

தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைக்குள்ளாகி வரும் திரைப்பட பாடல்கள் காப்புரிமை சம்பந்தமாக கே. ராஜன் பேசியதாவது, “ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத் தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர்தான் வாங்குகிறார்.
இயக்குநர் செல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது. 10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்யூன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.

கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். ஆனால் கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் ’நான்தான் கட்டினேன்.. எனக்குத் தான் சொந்தம்’ என்று சொன்னால் முட்டாள்தனமாக இருக்கும் தானே?

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? | the lyricist also claims the rights to the song?- Madras High Court question in Ilayaraja case

இளையராஜாவுக்கு பண பேராசை!

அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார்.அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம்.

இளையராஜா ஒரு பெரிய இசைஞானி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்” என்று கே. ராஜன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: திக் திக் நெல்லை

கடலோர மாவட்டங்களை தாக்கும் ’கள்ளக்கடல்’ : ரெட் அலர்ட் கொடுத்த இன்காயிஸ்!

 

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *