கொஞ்சம் ரிலாக்ஸ்… ஏடிஎம்ல ஏசி காத்து: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு ஆபிஸ் கிளம்பி வந்துக்கிட்டு இருந்தப்போம், ஏடிஎம் போனேன். ஏடிஎம் உள்ள ஒருத்தர் ரொம்ப நேரம் நின்னுக்கிட்டு இருந்தாரு… உடனே கதைவை தட்டுனேன்.

வெளிய வந்தவரு, “சாரி சார்… அடிக்குற வெயிலுக்கு கொஞ்சம் நேரம் ஏசியில ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்னு” சொன்னாரு…

அவரை அப்படியே பார்த்து ஒரு லுக்கு விட்டுட்டு, “ரிலாக்ஸ் பண்றதுக்கு வேற இடமே கிடைக்காதா உங்களுக்கெல்லாம்ன்னு” மனசுல நினைச்சிக்கிட்டே ஏடிஎம் உள்ள போனேன்…

ஆனா, அப்புறம் தான் தெரிஞ்சது அடிக்கிற வெயிலுக்கு ஏடிஎம் ஏசி காத்தும் கொஞ்சம் நல்லா தான் இருக்கு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
ஓரமா போய் விளையாடுங்க.
….காசு கொடுத்த தயாரிப்பாளர் mind voice
# இளையராஜா vs வைரமுத்து

Kirachand
கோடை வெயில் சுட்டெரிக்கையில் சில்லுன்னு ஒரு காத்து உடம்பை வருடிக்கொண்டு போகுமே…
அந்த நேரத்தில் உணர முடிகிறது மரத்தின் அருமையை!

ச ப் பா ணி
சந்தேகம் is a word

மனசில் பட்டதை ஓபனா கேட்டேன் is an emotion

 

கடைநிலை ஊழியன்
எனக்கு சொந்தமாக வீடு சைக்கிள் கூட இல்லை – மோடி
#டீ கடையாவது இருக்கா.. இல்ல அதுவும் இல்லையா ஜி.

Sasikumar J
ஏண்டா இனிமேல் என் கிட்ட கைநீட்டி காசு வாங்க மாட்டேன்னு சொன்ன இப்ப கேட்கிற…!
அதான் அண்ணே Gpay பண்ண சொன்னேன்…!!

vijaychakkaravarthy
வீட்ல ஏதோ ஒரு கதய சொல்லிட்டு வேக வேகமா partyக்கு போறது bachelor life ..
friendsட கதய சொல்லிட்டு partyல இருந்து வேகமா கிளம்பி வீட்டுக்கு போறது, family life

கடைநிலை ஊழியன்
என்ன மாப்ள.. முட்டைய எடுத்துடு மொட்டமாடிக்கு போறிங்க..
ஆம்லெட் போட மாமா.. அடிக்கிற வெயிலுக்கு ஆம்லெட் சும்மா சூப்பரா வரும் மாமா.. கேஸ் செலவு மிச்சம்..

ச ப் பா ணி

எதை நீ தேடிக் கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடாமல் தேமேனு கிடக்கும்’

#பைக் சாவி

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜம்மு காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

பாலியல் குற்றச்சாட்டு: ஹெச்.டி.ரேவண்ணா கைது!

+1
1
+1
17
+1
0
+1
4
+1
1
+1
6
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *