பியூட்டி டிப்ஸ்: கோடையில் மேக்கப் கலையாமல் இருக்க…

டிரெண்டிங்

கோடைக்காலத்தில் நீங்கள் என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கி விடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சரியான அழகு சாதனப் பொருட்களை, சரியான விதத்தில் பயன்படுத்தினாலே போதும்.

முதலில் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், தூசிகள் போன்றவை நீங்க வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு நல்ல சுத்தமான துண்டை கொண்டு துடைத்துவிட்டு உலர்ந்த பிறகு மேக்கப் போட தொடங்குங்கள்.

மேக்கப்புக்கு மாய்ஸ்ச்சரைசர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் வறண்ட சருமமாக இருந்தால் கண்டிப்பாக மாய்ஸ்ச்சரைசர் அவசியம்.

முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் மேக்கப் திட்டு திட்டாக தெரியாது.  சரியான அளவு மாய்ஸ்ச்சரைசர் அப்ளே செய்வதும் முக்கியம்.

கொஞ்சம் அதிகமானால்கூட உங்கள் மேக்கப் எளிதாக களைந்து விடும். எனவே போதுமான அளவில் மாய்ஸ்ச்சரைசர் போட்டு மேக்கப் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடுவதற்கு சிலிக்கான் வகையான பவுண்டேஷனை பயன்படுத்துங்கள். அவை உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தாலும் போதுமான ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

பவுண்டேஷனை அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், நிறத்திட்டுகள் போன்றவற்றை கன்சீலர் கொண்டு மறைக்க மறந்துவிடாதீர்கள். கன்சீலரை சரியான இடத்தில் அப்ளே செய்து பரவாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

நல்ல தரம் வாய்ந்த பவுடரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. சிறுத அளவு பவுடரை பிரஷ்ஷில் தொட்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

பிரஷ் இல்லாமல் அப்படியே பவுடரை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள். இது உங்கள் மேக்கப்பை கலைத்து விடும்.

வாட்டர் ப்ரூவ் உள்ள மஸ்காரா, ஐ லைனர் மற்றும் அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

இந்த நீரினால் அழியாத மேக்கப் பொருட்கள் எண்ணெய் பசை சருமத்துக்கும், அதிகமாக வியர்க்கும் சருமத்துக்கும் ஏற்றதாக இருக்கும். இதனால் உங்கள் மேக்கப்பும் அழியாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

முக்கியமாக… நல்ல வெளிச்சமான அறையில் அல்லது நல்ல சூரிய ஒளி படும் அறையில் உட்கார்ந்து மேக்கப் போடுங்கள். அப்போதுதான் சரியான அளவில் அழகான கச்சிதமான மேக்கப் செய்ய முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அந்த புண்ணியவானுக்கு போன் போட்ட புண்ணியவான்: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: பம்பரம் இல்லை… பானைக்கு சிக்கல்… திமுக ரியாக்‌ஷன் இதுதான்!

ரீமேக் ஆகும் கமலின் சத்யா?

“ப்ரீத்திக்கு நான் கேரண்டி” : மோடியை விமர்சித்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *