ரீமேக் ஆகும் கமலின் சத்யா?

சினிமா

1988 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இன்று வரை இந்த படம் பல சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது.

இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற வளையோசை என்ற பாடல் இன்றும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரல் ஆகிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கையில் காப்பு அணியும் டிரெண்ட் உருவானது.

கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்யா ரீமேக்கில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

சமீப நாட்களாக அசோக் செல்வன் சத்யா கமல் கெட்டப்பில் இருப்பதால் தான் இப்படி ஒரு செய்தி சினிமா வட்டாரத்தில் பரவ தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹமாஸ்: காரணம் என்ன?

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

மருத்துவமனையிலிருந்து சத்குரு டிஸ்சார்ஜ்!

அதிமுக கூட்டணிக்கு போகாதது ஏன்?: அன்புமணி விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0