இந்த வாரம் திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாகும் படங்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் பின் வருமாறு:
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ படம் இன்று (ஏப்ரல் 26) வெளியாகிறது.
நடிகர் தமன் குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘ஒரு நொடி’ என்ற திரில்லர் படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே போன்று எஸ் சசிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இங்கு மிருகங்கள் வாழும் இடம்’, யுவன் பிரபாகரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கொலைதூரம்’ ஆகிய படங்களும் இன்று வெளியாகிறது.
மலையாளத்தில் “பவி கேர்டேக்கர்” என்ற படமும், ஹாலிவுட்டில் ’லேட் நைட் வித் டேவில்’, ’சேலஞ்சர்ஸ்’, ’கோஸ்ட் பஸ்டார்ஸ்: ஃப்ரோசன் எம்பயர்’ ஆகிய படங்களும், ஹிந்தியில் ’ரஸ்லான்’, ’காப்ரு கேங்’ ஆகிய படங்களும் இன்று வெளியாகிறது.
ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் பின் வருமாறு:
தீரவ், பானு, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான ’வெப்பம் குளிர் மழை’ திரைப்படம் ஆகா ஓடிடியில் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடித்த ’பீமா’ திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகி உள்ளது.
இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடித்த ’ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இன்று (ஏப்ரல் 26 ஆம் தேதி) வெளியாகிறது.
சித்து, அனுபமா பரமேஸ்வர் நடித்த ’டில்லு ஸ்கொயர்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 26) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
ஹிந்தியில் வித்யூத் ஜம்வாலின் ’கிராக்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், ’தி பீகீப்பர்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் லயன்ஸ்கேட் தளத்திலும் வெளியாகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது : முழு விவரம்!
இன்று இரவு முதல் ஒருவழிப்பாதையாகும் சென்னையின் முக்கிய சுரங்கப்பாதை!
ஹெல்த் டிப்ஸ்: கோடைக்கேற்ற ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சைப் பழங்களை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: முழங்கைகளில் உள்ள கருமை மறைய எளிய தீர்வு!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!