இது திமுக புயலா? அதிமுக புயலா? – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

போட்டுத் தாக்கிக்கிட்டிருக்கு புயலும் மழையும். செல்போன் சிக்னல் கூட அப்பப்ப வந்து வந்து போகுது. அப்படி கொஞ்சம் சிக்னல் நல்லா இருந்தப்ப திருச்சிலேர்ந்து ஒரு நண்பர் போன் போட்டு, ‘எப்படி இருக்கே?’னு விசாரிச்சாப்ல.

கூடவே ஒரு கேள்வியும் கேட்டாப்ல, ’ஏண்ணே… இப்ப சென்னையை மிரட்டிக்கிட்டிருக்கே இந்த புயலு திமுக புயலா? அதிமுக புயலா?’னு.

நான் கடுப்பாகி, ‘ஏன்ய்யா… இதுதான் திருச்சி திமிரா? புயல்ல ஏதுய்யா கட்சி?’னு திருப்பிக் கேட்டேன்,
’கோபப்படாதண்ணே… இது எனக்குத் தெரிஞ்சு அதிமுக புயல்தான். ஏன்ன்னா… திமுக ஆட்சிக்கு கெட்ட பேரு வாங்கிக் கொடுக்குறதுக்குதான் வந்திருக்கு.

அதுமட்டுமில்ல… நாளைக்கி ஜெயலலிதா நினைவு நாள். சென்னையிலேர்ந்து 90 கிலோ மீட்டர் தூரத்துலயே புயல் ஏன் இன்னும் வெயிட் பண்ணுதுன்னா… நாளைக்கு காலையில ஜெயலலிதா சமாதியில அஞ்சலி செலுத்திட்டு அப்படியே ஆந்திரா போகலாம்னு ப்ளான் பண்ணிருக்கு. அப்படின்னா அது அக்மார் அதிமுக புயல்தானே?னு விளக்கம் வேற கொடுத்தாரு.

ஏன்யா புயலுக்கு பேருதான் வச்சீங்கனு பாத்தா இப்ப கட்சியிலயும் சேத்துட்டீங்களா?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

கடைநிலை ஊழியன்
மழை பெய்தா பரவாயில்ல..
மழை கொட்டுனா என்ன பண்றது..
Mannar & company™
இப்பல்லாம் வர்ற புயலும் சரி,
இப்ப வளர்ற பயல்களும் சரி
எப்படி உருமாறுவாங்கன்னு தெரியமாட்டேங்குது!
DESPOTER 
மழை பின்னி பெடலெடுக்குது…. கார் வீட்டுக்குள்ள பார்க்கிங் ஏத்திவிட சோம்பேறி தனபட்டு வெளிய மரத்துக்கீழ விட்டுட்டேன், ஃபோன் 10 நிமிஷம் சார்ஜ் போட்டா ஏறிடும்னு கர்வம் தலைக்கேறி சார்ஜ் போடாம தூங்கிட்டேன் நேத்து நைட்டு கரெண்ட் போய் இன்வெர்ட்டர் காலி ஆகி உக்காந்துட்டு இருக்கேன்.
லேப்டாப்ல ஃபோன் சார்ஜ் ஏத்திட்டு இருக்கேன்… மிக மோசமான மழை ஃப்ரெண்ட்ஸ்… நேத்து சாயந்திரம் ஆரம்பிச்சான் இன்னும் நிறுத்தினப்பாடு இல்ல….
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வீட்டை விட்டு வெளிய போகாதீங்கன்னு லீவும் விட்டு அறிவிப்பு பண்ணப்புறமும் மொபைல் கேமராவும் லைவ் ரிலேவுமா வெளிய சுத்துற முக்காவாசி பய பூரா யாரு, தேர்தலுக்கு ஓட்டு போட வாங்கன்னு லீவு குடுத்தப்போ வீட்டுக்குள்ளயே டீவி பார்த்துட்டு குத்த வைச்ச பயலுகதேன் இதெல்லாம் என்ன பெருமையா..? கடமை!
சுதீப்-த ரா 
சென்னைல இருக்கவங்க நீச்சல் அடிக்க சும்மிங்பூல் போயி பணத்தை வீணடிக்கத் தேவையில்லை…..
Ramachandran
மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் கட்டிடத்தாலும் சூழப்பட்ட தீபகற்பத்தில் பாதுகாப்பாக உள்ளேன்
mohanram.ko
தினமு‌ம் அதே பேருந்தில் வருவதை நிருபிக்க, சரியான சில்லரை கொடுத்தாலே போதும்

லாக் ஆஃப்

 

+1
3
+1
8
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *