வாரிசு பட இயக்குநரின் அடுத்த படம்.. ஹீரோ இவரா?

சினிமா

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி.

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான “முன்னா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வம்சி.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவரது இயக்கத்தில் வெளியான ஜூனியர் என்டிஆரின் “பிருந்தாவனம்”, ராம்சரணின் “ஏவடூ” ஆகிய படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க,

அதன்பிறகு நடிகர்கள் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த தோழா படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கினார்.

அதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வெளியான மகேஷ்பாபுவின் “மகரிஷி” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளை வசூல் செய்தது மட்டுமின்றி தேசிய விருது வென்று அனைவரையும் பிரமிக்க வைத்தது.

இப்படி தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வசூலை குவித்து கொண்டிருந்த வம்சி நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் அதிக வசூல் ஈட்டியதன் மூலம் வாரிசு படம் ஹிட் பட்டியலில் சேர்ந்தது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி ஹிந்தியில் தனது முதல் படத்தை இயக்க போவதாகவும் அந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

வம்சி – ஷாஹித் கூட்டணியில் உருவாகும் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு ஹிந்தியில் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஷாஹித் கபூருடனான படம் குறித்த தகவலை இயக்குநர் வம்சி வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “ஷாஹித் கபூரின் அடுத்த படத்தை நான் இயக்குவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, அது உண்மையல்ல. எனது அடுத்த படம் பற்றி தற்போது எதையும் கூற முடியாது. சரியான நேரம் வரும்போது அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என்று வம்சி கூறியுள்ளார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் : பிசிசிஐ-க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

ஹாக்கி ஆர்வம் இருக்கா? உங்களுக்காகத்தான் இந்த சிறப்புப் பயிற்சிகள்!

”ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதி இல்லை” : பிரகாஷ் ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *