ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… இதை ஃபாலோ பண்ணுங்க!

டிரெண்டிங்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களின் முதல் சாய்ஸ், உணவைக் குறைப்பதாகவே இருக்கும். அதுவரை இயல்பாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, எடை குறைய வேண்டும் என்பதற்காக தினசரிப் பழக்கத்தை மாற்றி, திடீரென சாப்பிடாமல் இருக்கும்போது இந்த அணுகுமுறை, மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சோர்வாக உணர்வீர்கள். எனவே, நேரத்துக்கு சத்தாகச் சாப்பிட வேண்டியது அவசியம்.

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், சருமத்தைப் பொலிவுடன் வைப்பதற்கும் உடற்பயிற்சிகள் உதவும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். உங்களது சருமத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கும். இதனால், நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உங்கள் முகம் மற்றும் சருமம் பொலிவு பெறும்.

எடையைக் குறைக்க உடற்பயிற்சிகள் செய்வதற்கெல்லாம் நேரம் கிடையாது என்று சொல்லி உணவை ஸ்கிப் செய்து, தடாலடியாக எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கூந்தல் மற்றும் சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.

எனவே, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் வொர்க் அவுட்களை மேற்கொள்ளுங்கள். அதிக எண்ணெய் போன்றவை சேர்க்காமல் சமச்சீரான உணவை உண்ணுங்கள். இப்படி, ஆரோக்கியமான வழியில் உடலை ஃபிட்டாக வைக்கும்போது, மனதுக்கு ரிலாக்ஸாக இருக்கும். எடையும் குறையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயக்குமார் தனசிங் கடிதம் எப்போது கிடைத்தது? : நெல்லை எஸ்.பி. பேட்டி!

கொஞ்சம் ரிலாக்ஸ்… ஏடிஎம்ல ஏசி காத்து: அப்டேட் குமாரு

ஜம்மு காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

நீட் எழுதப் போறீங்களா? இதெல்லாம் மறந்துறாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *