அழகுத் துறையில் சீரம்தான் இப்போது டிரெண்ட். சருமப் பராமரிப்புக்கென விதவிதமான சீரம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதென்ன சீரம்… எதற்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
“க்ரீம்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது சீரம். நிறைய நீர்ச்சத்து நிறைந்த திரவம் இது. மருத்துவ குணங்கள் வாய்ந்தது. அனைவரும் சீரம் பயன்படுத்தியே தீர வேண்டும் என்றில்லை. பிரச்னைக்கேற்ப, உட்சேர்க்கைகளின் அடிப்படையில் சீரம் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
சருமப் பராமரிப்புக்கு கிளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைசர் என பல பொருள்களை உபயோகிக்கிறோம். அழுக்கை நீக்குவது, சருமத் துவாரங்களை மூடுவது, ஈரப்பதத்தைத் தக்கவைப்பது என ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை உண்டு.
அந்த வரிசையில் சீரம் என்பது சருமத்தால் எளிதில் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த திரவமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
பருக்களைப் போக்க, ஈரப்பதத்தைத் தக்கவைக்க, முதுமையைத் தள்ளிப்போட… இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்ப பிரத்யேக சீரம் பரிந்துரைக்கப்படுகிறது.
சீரம் பயன்படுத்த விரும்புவோர், மருத்துவ ஆலோசனையோடு, அவரவர் சருமத் தன்மை மற்றும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.
ஒவ்வொரு சீரம் பயன்படுத்துவதற்கென்றும் ஒருமுறை இருக்கிறது. சரும மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த சீரத்தையும் நீங்களாகப் பயன்படுத்த வேண்டாம்.
ஒரு நேரத்தில் ஒரு சீரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இரண்டு, மூன்றைக் கலந்து உபயோகிக்கக்கூடாது. அதேபோல காலை வேளைக்கானதை அந்த வேளையிலும் இரவில் பயன்படுத்த வேண்டியதை இரவிலும் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
சீரம் என்பதை மிகக்குறைந்த அளவே உபயோகிக்கும்படி மருத்துவர் பரிந்துரைப்பார். அந்த அளவைத் தாண்ட வேண்டாம்.
சீரம் உபயோகித்ததும் சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமையை உணர்ந்தால் அதைத் துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும். மருத்துவரிடம் அதுகுறித்துக் கேட்டுத் தெளிவுபெற்ற பிறகே மறுபடி பயன்படுத்த வேண்டும்’’ என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
விரைவில் சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்!
சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்!