ஜம்மு காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் இன்று (மே 4) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாசிதார் பகுதியில் இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த கான்வாய் வாகனத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்து உதம்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஒரு விமானப்படை வீரரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, உடனடியாக சம்பவம் அறிந்து ஷாசிதார் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளனர்,

இந்த பகுதியில் விமானப்படை வீரர்கள் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ராணுவ வீரர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாசிதார் அருகே இந்திய விமானப்படையின் கான்வாய் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அப்பகுதி உள்ளூர் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தொடர்ந்து தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். கான்வாய் வாகனம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாலியல் குற்றச்சாட்டு: ஹெச்.டி.ரேவண்ணா கைது!

நீட் எழுதப் போறீங்களா? இதெல்லாம் மறந்துறாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “ஜம்மு காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

  1. என்னடா தேர்தல் வந்துருச்சே இன்னும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காணவில்லையே என்று நினைத்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *