ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியையும், உரிமையும் நாம் இழந்து விடுவோம் என நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அறியப்படும் பிரபலமான நடிகர் பிரகாஷ்ராஜ். அவர் பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து துணிச்சலாக விமர்சித்து வருகிறார். அவ்வப்போது அவர் வெளியிடும் கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்களை சேர்ந்த 88 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 26) தேர்தல் நடக்கிறது.
அதன்படி, இன்று காலையிலேயே பெங்களூரில் தனது வாக்கினை செலுத்திய பிரகாஷ் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர். ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
எனது வாக்கு எனது உரிமைக்காக நிற்கிறது. அது என்னைப் பிரதிநிதித்துவம் செய்பவரை, நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் ஒலிப்பது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான எனது அதிகாரம். நீங்கள் நம்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
I have Voted .. please go and Vote #justasking #SaveDemocracySaveIndia pic.twitter.com/shg7jDSVpU
— Prakash Raj (@prakashraaj) April 26, 2024
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன். முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம்” என்று பிரகாஷ்ராஜ் கூறினார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்மலா தேவி தலைமறைவு? – வழக்கு ஒத்திவைப்பு!
’லோகேஷ், அட்லீ தான் என் வாத்தியார்கள்’ : ஹரியின் பதிலால் ரசிகர்கள் ஆச்சரியம்!