prakash raj condemns

”ஜெய்பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?”: பிரகாஷ்ராஜ் கேள்வி!

சினிமா

”காந்தியைக் கொன்றவர்கள், அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

69-வது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் படங்களின் பட்டியல் கடந்த 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் வெளியான சமயத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ’காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது அறிவிக்கப்பட்டதும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற பல திரைப்படங்களுக்கு விருது கிடைக்காததும் திரையுலகம் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களோடு திரைபிரபலங்களும் வெளிப்படையாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு  விமர்சனத்தையும், வேதனையையும் தெரிவித்து வருகின்றனர்.

‘இந்தியா’வின் குரல் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

அதில்  முதல் நபராக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் தனது சமூகவலைதள பக்கத்தில், “தேசிய விருது வென்றவர்களுக்காக திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறோம். ‘ஜெய்பீம்‘ படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது ‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?” என தேசிய விருது கமிட்டி குழுவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

ஆயிரம் கேள்விகள் எழுகிறது!

இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்ற ஆயிரம் கேள்விகள் எழுகிறது. எனினும் 5 விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

தெலுங்கு முன்னணி நடிகர் நானி, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜெய்பீம் படத்தை குறிப்பிட்டு உடைந்த இதயத்தை எமோஜியாக வைத்திருந்தார்.

எப்படி விருது தருவார்கள்?

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது சமூகவலைதள பதிவில், ஜெய் பீம் திரைப்படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ”காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? #Justasking” என்று கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். 

கிறிஸ்டோபர் ஜெமா

கள ஆய்வில் முதலமைச்சர்… வித்தியாசம் காண்கிறேன்: ஸ்டாலின்

நம்பர் 1 அணியாகும் பாகிஸ்தான்… இந்தியாவுக்கு நெருக்கடி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *