நம்பர் 1 அணியாகும் பாகிஸ்தான்… இந்தியாவுக்கு நெருக்கடி!
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே ஐசிசி ஒருநாள் போட்டியில் நம்பர் 1 அணியாக மாற பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆறு நாடுகள் பங்கேற்கும் 50 ஓவர் ஆசியக் கோப்பை தொடர் வரும் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்க உள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளையில் பாகிஸ்தான் அணி ஆசியக்கோப்பைக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஏற்கெனவே 2-0 என்று தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது, ஆஸ்திரேலியாவிலிருந்து நம்பர் 1 ஒருநாள் அணி என்ற பட்டத்தை பறிக்க பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகி உள்ளது.
தற்போது ஐசிசி ரேங்கில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் தலா 118 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
ஒட்டுமொத்த அணி செயல்பாட்டில் ஆஸ்திரேலியா அணி 2,714 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2590 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் நம்பர்-1 ஒருநாள் அணி ஆவதற்கு பாகிஸ்தானுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மதியம் 2 மணியளவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 268 ரன்கள் குவித்துள்ளது.
தொடர்ந்து விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் தற்போது வரை விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் குவித்துள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் நம்பர் 1 அணி என்ற நம்பிக்கையோடு ஆசியக் கோப்பையை அந்த அணி எதிர்கொள்ளும். இது நெருக்கடி மிகுந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் எதிரொலிக்கும்.
அதேவேளையில் இந்திய அணி 113 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசியக்கோப்பை தொடரில் இரு அணிகளும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் பல்லிகொலேவில் சந்திக்கின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மூன்று தமிழர்கள்!
comfort zone விட்டு வெளியே வா… யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?