பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த கூல் சுரேஷ்… வெளியான ஷாக் வீடியோ!

சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான கூல் சுரேஷ், சுவர் ஏறி தப்பிக்க முயன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிந்து ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான கூல் சுரேஷ் சுவர் ஏறி தப்பிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சியின் 72-வது நாளான நேற்று (டிசம்பர் 12) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் கூல் சுரேஷ் சேர் ஒன்றை எடுத்து வந்து கார்டனின் ஓரமாக போட்டு அதில் ஏறி, பிக்பாஸ் வீட்டின் சுவரை எட்டி பிடிக்க முயல்கிறார்.

இதைப்பார்த்த மணி சந்திரா விரைந்து வந்து அவரை கீழே இறக்கி ஆறுதல் சொல்லி, வீட்டுக்குள் அழைத்து செல்கிறார். தொடர்ந்து பிக்பாஸிடமும்,  ”அவருக்கு என்ன பிரச்சினை பாருங்க தல” என மணி கோரிக்கை வைத்தார்.

பிக்பாஸ்

இதையடுத்து பிக்பாஸ் அவரை கன்பெஷன் ரூமிற்கு அழைத்து,”கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த நிகழ்ச்சி உங்களது வாழ்க்கைக்கு ஒரு நல்ல இடமாக அமையும்.

இதுபோன்ற விஷயங்கள் உங்களை மட்டுமின்றி, குடும்பத்தாரையும் கடுமையாக பாதிக்கும். கஷ்டமாக இருந்தால் என்னை அழைத்து பேசி இருக்கலாம் அல்லவா?” என ஆறுதலாக பேசினார்.

பதிலுக்கு சுரேஷ், ”எனக்கு பொழைக்க தெரியல பிக்பாஸ்” என்று அழுதார். தொடர்ந்து பிக்பாஸ் ஆறுதலாக பேச முடிவில் ”நான் இனி இப்படி செய்ய மாட்டேன் பிக்பாஸ்” என சுரேஷ் உறுதி அளித்தார்.

கஷ்டமா இருக்கு  

முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கார்டனில் உள்ள கேமராவின் முன்பு நின்று, ”தூக்கமே வரல குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன்.

கடந்த வாரம் மழை அதிகமா பேஞ்சதுன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. குடும்பத்தை மிஸ் பண்றேன்.

என்னடா இந்த நேரத்துல பேமிலிய விட்டுட்டு இங்க இருக்கணுமா? அப்படின்னு தோணுது. அதனால நானே வெளில வந்துடலாமான்னு பாக்குறேன்.

அவங்கள விட்டுட்டு இங்கே என்ன பண்றோம்னு தோணுது. பாப்போம் காலையில. என்ன சொல்றதுன்னு தெரியல,” என உணர்ச்சிகரமாக சுரேஷ்  பேசியிருந்தார்.

நாமினேஷன்

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு விஜய், நிக்ஸன், அனன்யாவுடன் சேர்த்து கூல் சுரேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.

வழக்கம் போல இல்லாமல் இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறவில்லை. அதோடு இதற்கு முன்பு வீட்டில் டபுள் எவிக்ஷன்கள் நடைபெற்றுள்ளன.

அதனால் இந்த வாரமும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றால் அனன்யா, நிக்ஸன், கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேற வாய்ப்புகள் இருக்கின்றன.

வாக்கெடுப்பின் அடிப்படையில் கூல் சுரேஷ் இந்த வாரம் வீட்டை விட்டு  வெளியேறுவாரா? என்பதை நாம் வழக்கம் போல பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற கூல் சுரேஷ் இதுவரை 9 முறை முயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

விபத்து : தந்தை கண்முன்னே சிறுமி உயிரிழந்த சோகம்!

கருப்பர் நகரம்: இயக்குநர் பொறுப்பில் இருந்து கோபி நயினார் வெளியேற்றம்!

 

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *