பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள்: உலகளாவிய தடைக்கு யுனெஸ்கோ பரிந்துரை!

Published On:

| By Monisha

UNESCO Suggest banning smartphones in schools

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்துக்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது எனவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

முன்னதாக 2018ஆம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது. பின்னர், இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

“நயன்தாரா பட ப்ரமோஷன்களில் பங்கேற்றால் நல்லா இருக்கும்”- விஷால்

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை பிரட்டல் (ஆடி ஸ்பெஷல்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel