விழுப்புரம் அருகே, தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி அனிதா 514 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயலு. இவர் சைக்கிளில் சென்று மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 5 மகள்கள் உள்ளனர்.
இதில் கடைசி மகள் அனிதா 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கில தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார் அனிதா.
இந்நிலையில், மார்ச் 4ஆம் தேதி சைக்கிளில் மிளகாய் வியாபாரத்திற்கு சென்ற சுப்பராயலு, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கார் மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தந்தை உயிரிழந்து சடலமாக வீட்டில் இருந்தபோதும், அனிதாவின் சகோதரிகளும், தாயாரும் அனிதாவை தேர்வுக்கு செல்லுமாறு ஊக்கப்படுத்தினர். கண்ணீரோடு தேர்வு எழுதி விட்டு அனிதா வீடு திரும்பிய பின்னர், அவரது தந்தைக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (மே 6) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் வெளியானது. இதில் அனிதா 514 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ் – 99
ஆங்கிலம் – 63
வரலாறு – 77
பொருளாதாரம் – 91
வணிகவியல் – 93
கணக்குப்பதிவியல் – 91
தந்தை இறந்த நாளில் அவர் எழுதிய ஆங்கில பாடத்தில் அவர் 63 மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அனிதா பேசியதாவது, “எனது தந்தை சைக்கிள் மூலம் மிளகாய் வியாபாரம் செய்து எங்கள் 5 பேரையும் படிக்க வைத்ததோடு, குடும்பத்தையும் காப்பாற்றி வந்தார். என் தந்தை இறந்து விட்டதால் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் இனி காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை.
எனது படிப்பும் எனது எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. நான் சிஏ படிக்க விடும்புகிறேன். எங்களுக்கு யாராவது உதவி செய்தால் நிச்சயம் என் தந்தையின் கனவை நான் நிறைவேற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளஸ் 2 ரிசல்ட்: வெற்றி பெற்ற திருநங்கை மாணவி!
திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை… காரணம் இதுதான்… அவரே வெளியிட்ட பதிவு..!